LOADING

Type to search

சினிமா

“மொத ராத்திரி” படக்குழுவை நேரில் அழைத்து கார்த்தி பாராட்டினார்

Share

மொத ராத்திரி’ பட இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் கார்த்தி பாராட்டினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மொத ராத்திரி’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் 2 வாரத்தில் ரூ.8 கோடி வசூலித்தது. இந்த நிலையில், இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவை நடிகர் கார்த்தி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.