LOADING

Type to search

சினிமா

ரஜினிகாந் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

Share

ரஜினிகாந் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு காணொளி ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.