ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா-2026 இன் விருதுகள் வழங்கும் வைபவத்தில் கௌரவிக்கப்பெற்ற தமிழ்க் கனடிய கலையுலக செயற்பாட்டாளர் வைரமுத்து சொர்ணலிங்கம்
Share
கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மார்க்கம் நகரில் யோர்க் சினிமா அரங்கில் நடைபெற்ற ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா-2026 இன் அங்குரார்ப்பண வைபத்தைத் தொடர்ந்து 26ம் திகதி சனிக்கிழமை மற்றும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் பல மொழித் திரைப்படங்கள் அங்கு திரையிடப்பெற்று முடிந்த பின்னர் 27ம் திகதி மாலை ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் விருதுகள் வழங்கும் வைபவம் ஸ்காபுறோவில் உள்ள ‘கிரான்ட் சினமன் கொன்வென்சன்’ மண்டபத்தில் நடைபெற்றது.
வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்’ பெற்றிருந்த இந்த விழாவிற்கும் திரைப்பட விழா நிறுவனர் செந்தூரன் நடராஜா மற்று கிருத்திகா ஆகிய இருவரும் முன்னின்று ஏற்பாடுகளைக் கவனிக்க அவர்களுக்கு ஆதரவாக வர்த்தகப் பிரமுகர்களும் ஏனைய கலையுலக மற்றும் ஊடகச் செயற்பாட்டாளர்களும் செயற்பட்டார்கள். எனவே மிகவும் சிறப்பாகவும் அழகிய முறையிலும் ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா-2026 இன் விருது வழங்கும் விழா தொடர்ந்தது.
ஆரம்பத்தில் திரைப்பட விழாவில் திரையிடப்பெற்ற பல மொழித்திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் என அனைத்திலும் தொடர்பாக வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. அவற்றைப் பெற்றுக்கொண்ட பல இனங்களையும் மொழிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் திரைத்துறை சார்ந்த இயக்குனர்களும் நடிக நடிகைகளும் மிகுந்த உற்சாகத்துடன் தங்கள் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
அன்றை விருது விழாவில் கௌரவிக்கப்பெற்ற தமிழ்க் கனடிய கலையுலக செயற்பாட்டாளர் வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களின் 35 லருட கால கலை மற்றும் இசைத்துறைச் சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட போது சபையில் அமர்ந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது























