கனடாவின் Mr. Tamil Canada அமைப்பு Mr. Tamil International என்ற பெயரில் விரிவாக்கம் பெறுகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை அண்மையில் அறிவித்தது. இதனை அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் கனடாவில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற மாபெரும் இசைப் பெருவிழாவில் பெருமையுடன் அறிவித்தார். கடந்த நான்கு ...
இருளப்பன் ஜெகநாதன் சுயாதீன ஊடகவியலாளர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்து சமுத்திரத்தின் தனது ராஜாங்கத்தை நிலைநிறுத்திவதில் இதுவரை பனிப்போராக இருந்து வந்த சீனா இந்திய ராஜதந்திர போர் இன்று நேரடியாகவே மோதிக்கொள்கின்ற நிலை உருவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சீன கப்பல் Yuan Wang 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் – ‘அகப்பை அவன் கையில்‘ இன்றும் அதே நிலைதான் மாற்றமின்றி தொடர்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக் கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் குறிப்பாக ரணில் – ராஜபக்ஷக்கள் அரசாங்கம் சாதித்துக் கொள்ள முயல்வது என்ன? தமிழ்மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ரணில் – ராஜபக்ஷக்கள் அரசாங்கம் கூற வருகின்ற செய்தி என்ன? இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய விடயங்களில் தமது நலன்களுக்காக இவ்வiறான முடிவுகளை அறிவிப்பதும் அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தாதுவிடுவதும் மீண்டும் புதிது புதிதாக முடிவுகளை அறிவிப்பதும் வழமையான ஒன்று. இலங்கை அரசாங்களின் இவ்வாறான நகர்வுகளின் ஒரு நீட்சியே புலம்பெயர் தமிழர்கள் மீதான தற்போதைய தடை நீக்கம் ஆகும். ரணில் – ராஜபக்ஷக்கள் அரசாங்கம் தமது நலன்களுக்காக நாளை இதனை மாற்றிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்றைய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அன்று பிரதமராக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேனவுடன் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தபோது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தோற்றுவிக்கப்பட்டது.நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவருவதில் தமிழ்மக்களின் பங்களிப்பு குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு மிக அளப்பரியதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தை தாமே கொண்டுவந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெஞ்சை நிமிர்த்தி பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த காலம். இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் ஜநா மனித உரிமை சபையில் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன் வரவில்லை‘ என்று அப்போதைய வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.அந்த வாக்கறுதிகளுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி தமிழ் மக்களுக்கு குறிப்பாக புலம் பெயர் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தவகையில் புலம்பெயர் அமைப்பக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கம் குறித்து கொண்டாடுவதற்கு என்ன உள்ளது. 2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் இந்த அமைப்புகளில் பல மாறி மாறி பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு மீண்டும் பலமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 16 அமைப்புகளையும் 424 நபர்களையும் தடை செய்தது. நவம்பர் 20 அன்று நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புகள் மற்றும் அவற்றில் அங்கம் வகித்த 267 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது. பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஏழு அமைப்புகளையும் 389 நபர்களையும் தடைப் பட்டியலில் சேர்த்தது. இ தற்போது 6 அமைப்புகளும் 316 நபர்களும் மீண்டும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாஷைகளை அடைவதற்கான பயணத்தில் 2014 இல் பட்டியலிடப்பட்டோம் 2015 லும்பட்டியலிடப்பட்டோம் 2021 இல் மீண்டும் பட்டியலிடப்பட்டோம். 2022 இல் மீண்டும் பட்டியலிடப்பட்டோம்‘ என்று சுரேந்திரன் ‘த ஜலன்ட்‘ நாளிதழுக்ககுத் தெரிவித்துள்ளார். மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் கட்சிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியே புலம் பெயர் அமைப்பகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை விதிப்பதும் பின்னர் சில அமைப்பகள் மீதான தடைகளை நீக்குவதும் மீண்டும் தடைவிதிப்பதுமாக நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர். இதுபற்றி டெய்லிமிரர் ஆகஸ்ட் 16 ஆம்திகதி (16.08.2022) தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றது. தேசிய பாதுகாப்பிற்கு விரோதமான அமைப்புக்கள் என தடை செய்யப்பட்ட இரண்டு முறையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ராஜபக்சவால்முடிவெடுக்கப்பட்டது அதே நேரத்தில் தடையை நீக்கும் முடிவுகளை ரணில் விக்கிரமசிங்கே முதல்முறையாக பிரதமராகவும் இப்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் போது எடுக்கப்பட்டுள்ளது. எனவே உளவுத்துறை மதிப்பீடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல அரசியல் முடிவுகள் என்று எவரும் முடிவு செய்வது இயல்பானதே. கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்திருந்தால் அதிகாரிகள் சமீபத்திய முடிவை எடுத்திருப்பார்களா? என்று கேள்வி எழுப்பும் ‘டெய்லி மிரர்‘ ஆசிரியர் தலையங்கம் எவ்வாறாயினும் ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தின் முடிவுகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் இத்தகைய மதிப்பீடுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு காரணமாகும். எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷக்களின் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் காது கேளாத மௌனத்தையும்; மீறி சமீபத்திய முடிவுக்கு உடன்படுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புக்கள் மற்றும் 267 நபர்களை பட்டியலிலிருந்து நீக்கியபோது அவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதையும் டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. உண்மையில் ‘தேசிய பாதுகாப்பு‘ என்ற போர்வையில் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் தீர்மானங்களே இவை. இந்த தீர்மானங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. கடந்த கால தடைகள் தடை நீக்கம் என்பன மாத்திரமல்ல தற்போதைய தடை நீக்கமும் இதனையே உணர்த்தி நிற்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது 2010 ஆம் ஆண்டளவில் புலம் பெயர் அமைப்புக்களில் ஒரு சில அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் அவரை வந்து சந்தித்தனர். தமிழர்களுக்கு உதவ வேண்டும் தமிழர் பகுதிகளில் முதலிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடுதான் வந்தனர். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. வந்தார்கள் சென்றார்கள் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் இவர்களின் வரவை வைத்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பரபரப்புச் செய்திகளாக்கி ஊடகங்களுக்குத் தீனி போட்டது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஒன்றும் நடைபெறவில்லை. அண்மையில் நண்பர் ஒருவர் வீடியோ கிளிப்பொன்றை அனுப்பி வைத்திருந்தார். வெளி நாட்டில் இருந்து வடக்கில் முதலிடவந்தவர்.அவர் தனது பெயர் வாசுதேவன் என்று குறிப்பிடுகின்றார்.40 வருடங்களுக்கு மேல் வெளி நாட்டில் வசித்துவருவதாகவும் சொந்தக் கம்பெனி வைத்திருந்ததாகவும் ஓய்வு பெற்று தாயகம் திரும்பி தாயகத்தில் முதலிட்டு தொழில் தொடங்க வந்ததாகக் குறிப்பிடுகின்றார். நோயாளியான ஒருவர் சிகிச்சையின் பின் மீள் எழ அதாவது பழைய நிலைக்குத் திரும்பும் நிலை உள்ளது. அந்த சநஉழஎநசல ...