பாகிஸ்தானில் கடும் மோதலில் 24 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
Share
பாகிஸ்தானில் கடும் மோதலில் 24 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த தனித்தனி மோதல்களில் 24 பயங்கரவாதிகள், ஒரு அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலுசிஸ்தானில் கோல்பூர், கர்டகாப், நுஷ்கி பகுதிகளில் நடந்த நடவடிக்கையில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ராணுவத்தை சேர்ந்த இருவரும் உயிரிழந்தனர். வடக்கு வாஜிரிஸ்தானில் 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.













