LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் மீது இன்று முதல் 50 சதவீத வரி

Share

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் வர்த்தக போருக்கு வழிவகுத்தார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவித்தார். இதனால், சர்வதேச அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்திற்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரும்பு, அலுமினியம் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தி அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இரும்பு, அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.