LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 3ம் திகதி அன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா (வயது 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த 02ஆம் திகதி மலத்துடன் இரத்தம் வெளியேறியது. பின்னர் 03ஆம் திகதி அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.