LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா GTA , இலத்திரனியல் ஊடக நிறுவன அதிபர் கெங்காதரனுக்கு கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் இவ்வாண்டிற்கான ஊடகம் பணிக்கான விருது

Share

கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகையாளர்களுக்கான மிகப்பெரிய அமைப்பான கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் (National Ethnic Press and Media Council of Canada) இவ்வாண்டிற்கான கலை மற்றும் ஊடகம் சார்ந்த சிறப்பு விருது கனடா GTA ,இலத்திரனியல் ஊடக நிறுவனத்தின் அதிபர் கெங்காதரன் அவர்களுக்கு வழங்கப்பெற்றது.

12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மேற்படி விருதுகள் வழங்கும் நிகழ்வில் கனடாவின் மத்திய- மாகாண- மற்றும் நகராட்சி அரசுகளின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டு விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கினர்.

இங்கே காணப்படும் படங்களில் ஒன்றாரியோ மாகாணத்தின் என்டிபி கட்சியின் தலைவியும் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவியுமான மெரிட் ஸ்ரைல்ஸ் (Marit Stiles) கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் (National Ethnic Press and Media Council of Canada) தலைவர் தோமஸ் சாரஸ் (Mr.Thomas Saras), ‘தமிழாரம்’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர் கேதீஸ் அவர்கள். விருது பெற்ற கெங்காதரன் விநாயகமூர்த்தி அவர்களின் துணைவியார் மற்றும் புதல்விகள்.இவர்களுடன் கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் (National Ethnic Press and Media Council of Canada) சிரேஸ்ட உப தலைவரும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லோகன் லோகேந்திரலிங்கம் ஆகியோர் காணப்பெறுகின்றனர்.

(தகவல்: சத்தியன் ஜீவராஜ்)