தியாகி அன்னை பூபதி அம்மாவின் திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்திப் பவனி யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து ஆரம்பம்!
Share
பு.கஜிந்தன்
அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இவ்வாறு புறப்பட்ட ஊர்தியானது வடக்கு – கிழக்கு முழுவதும் ஊர்வலமாக வந்து, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.
பின்னர் அங்கு இறுதி நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.















