LOADING

Type to search

உலக அரசியல்

விண்வெளிக்கு செல்லும் நுண்ணுயிரிகள் – சிலி நாட்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு

Share

விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை சோதிக்க சிலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அண்டார்டிகா கண்டம் மற்றும் சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் வசிக்கும் 6 வகையான நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்ப ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். போலாரிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஆய்வு, டாக்டர் ஜெனி பிலெய்மி என்ற விஞ்ஞானியின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த திட்டத்தின்படி, பூமியில் இருந்து அனுப்பப்படும் நுண்ணுயிரிகள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அங்கு பிராண வாயு, புவியீர்ப்பு விசை இல்லாத சூழல், அதிக கதிர்வீச்சு மற்றும் வெப்பநிலையை இந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு எதிர்கொள்கின்றன? என்பது கண்காணிக்கப்பட உள்ளது. இந்த நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.