மோகன்லால் – சுசித்ரா தம்பதியினர் 38வது திருமண நாளை கொண்டாடினர்
Share
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால், இந்திய சினிமாவில் மிகுந்த மரியாதையும் ரசிகர் ஆதரவும் பெற்றவர். 1980களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது, நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘பேட்ரியாட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மோகன்லாலின்‘திரிஷ்யம் 3’ படம் மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் பிரியதர்ஷனின் 100-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், மனைவி சுசித்ராவுடன் அமெரிக்கா சென்றுள்ள மோகன்லால் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவரின் திருமண நாளான இன்று சுதந்திர தேவியின் சிலைக்கு அருகே மனைவியுடன் நின்றுகொண்டிருந்த படத்தை வெளியிட்டு, “38 ஆண்டுகள் கழித்தும், இப்போதும் புதிதாக துவங்கியதை போலவே உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.















