கோலிவுட்டில் தடம் பதித்த நடிகர் க்ரித்திக் மோகன்
Share
தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் க்ரித்திக் மோகன். ‘பிரேக்பாஸ்ட்’ திரைப்படம், இவரை ஒரு பண்பட்ட கதாநாயகனாக அடையாளம் காட்டியிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை ‘படிப்பு தான் முக்கியம்’ எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார். இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து, காதல் காட்சிகளிலும், எமோஷனல் சீன்களிலும் செம ஸ்கோர் செய்திருக்கிறார்! அடுத்து, ஓசூர் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில், வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார். இது தவிர, மேலும் இரண்டு முக்கிய படங்களில் ஒப்பந்தம் ஆகி கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரத் தயாராகிவிட்டார். துடிப்பான நடிப்பு, எதார்த்தமான முகம் – தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான கதாநாயகனாக வலம் வருவார்..















