LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய மேலும் 2 பேரை கைது செய்தனர்

Share

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பதாக இருந்த வெள்ளை மாளிகை மல்யுத்த நிகழ்ச்சி, கடந்த 14-ந் தேதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த நிகழ்ச்சிக்கு நடுவே, ஒரு பயங்கரவாத சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கியுள்ளது. அதிபர் டிரம்ப்பை குறிவைத்து, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோன் விமானங்களை மோதவிட்டு கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த ஒரு கும்பல் ரகசியமாகத் திட்டமிட்டிருந்தது. இந்த அதிர்ச்சித் தகவல் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியவந்ததால், 5 பேர் கொண்ட கும்பலை அவர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இந்நிலையில், இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் தொடர்புடைய மேலும் 2 முக்கிய நபர்களைப் காவல்துறை தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.