LOADING

Type to search

உலக அரசியல்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவினால் வெனிசுலாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது.. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகினர்

Share

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கி உயர்ந்துள்ளது. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கடலோரப்பகுதியில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மோரோன் பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக அடுத்தடுத்து பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன. இந்த அதிபயங்கர இயற்கைச் சீற்றத்தினால் தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா ஆகிய நகரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து. இடிந்து தரைமட்டமாகின. 10 அடுக்குமாடி கட்டிடங்கள் கூட பாய் சரிவது போலத் தட்டையாகச் சரிந்து விழுந்துள்ளன. வரலாறு காணாத பேரிடரால், அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அன்று இரவில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். சேதமடைந்த மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்காக 200 மில்லியன் (சுமார் ரூ.2,000 கோடி) அமெரிக்க டாலர் புனரமைப்பு நிதியை அரசாங்கம் ஒதுக்குவதாக அறிவித்தார். இந்த பேரிடரில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனரகப் பொக்லைன் எந்திரங்கள் இல்லாததால், பொதுமக்கள் தங்களின் கைகளாலேயே கட்டிட இடிபாடுகளை அகற்றி உறவினர்களைத் தேடி வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் வெனிசுலாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இருந்து தவிக்கிறார்கள். இதையடுத்து அந்த நாட்டுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன.