LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது

Share

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளை, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்க் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. மேலும், தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறி சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் தெற்கு துறைமுக நகரமான தஹிரியொ பெரி நகரில் ஏவுகணை, டிரோன் மற்றும் ஆயுதக்கிடங்குகள், ரேடார் கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.