LOADING

Type to search

உலக அரசியல்

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்

Share

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அதிகாலை ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த 14 பேரும் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அதிகாலை சுமார் 6 மணியளவில் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.