அமீர் கான் – கவுரி ஸ்ப்ராட் திருமணம் நடைபெற்றது
Share
அமீர் கான் – கவுரி ஸ்ப்ராட் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தனது காதலி கவுரி ஸ்ப்ராட்டை மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அமீர் கான், தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமீர் கான், “ஜூலை 5-ஆம் தேதி நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். எங்கள் இல்லத்திலேயே திருமணம் நடைபெறும். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொள்வார்கள். எங்களுடைய திருமணத்திற்கு உங்களுடைய அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும். உங்கள் ஆசியுடன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். அப்போது அவரது மகன் ஜுனைத் கானும் உடனிருந்தார்.















