காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்
Share
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மும்முறை தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற பிரவீன் சித்திரவேலுவுக்கும், வெண்கலப் பதக்கத்தை வென்ற செல்வ பிரபு திருமாறனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அபாரமான திறமையும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது. இந்த மகத்தான சாதனை, பதக்க வெற்றியைத் தாண்டி, இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமூட்டும் வரலாறாக அமைந்துள்ளது. இன்னும் பல சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள்! உங்கள் சாதனை பயணம் தொடரட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















