LOADING

Type to search

இந்திய அரசியல்

திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது

Share

திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது, திருவள்ளூர் ராஜாஜி சாலையில் தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க. பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் செயல்பட்டு இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, பெரிய பாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 10 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதில் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே கடந்த மார்ச் 4-ந் தேதி திறக்கப்பட்டது. எனினும் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. எனவே புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் மீதம் உள்ள கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிந்து உள்ளதால் திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் வருகிற 10-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரப்பட உள்ளது. அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.