காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் பாதிப்பால் 1,556 பேர் உயிரிழந்தனர்
Share
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 1,556 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில், காங்கோவில் 3,532 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் எபோலா வைரஸ் பாதிப்பால் 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.















