LOADING

Type to search

உலக அரசியல்

வங்கதேச புதிய அதிபராக மிர்சா பக்ருல் தேர்வுசெய்யப்பட்டார்

Share

வங்கதேசத்தின் புதிய அதிபராக ஆளும் பிஎன்பி கட்சியை சேர்ந்த மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு வீழ்ச்சியடைந்தது. அதன்பின் இந்த ஆண்டு பிப்ரவரி 12 நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிஎன்பி கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தாரிக் ரஹ்மான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023இல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு இருந்தபோது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷஹாபுதீன் (76 வயது) தனக்கு கடுமையான உடல்நலக்குறைவு இருப்பதாக அறிவித்து கடந்த ஜூலை 24 அன்று ராஜினாமா செய்தார். ஆனால் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான அவர், கடும் அரசியல் அழுத்தத்திற்கு மத்தியிலேயே ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. வங்கதேச அரசியலமைப்புச் சட்டப்படி 90 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 255க்கு 88 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளும் பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நாட்டின் 23வது அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர்.