LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கமலினிக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்தார்

Share

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கமலினிக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ‘மகளிர் கிரிக்கெட்’ பிரிவில், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், குறிப்பாக அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வழங்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கும் உயரிய ஊக்கத் தொகை தமிழக அரசால் முன்பிருந்த ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய ஊக்க தொகையினை பெறும் வீராங்கனையர் கமலினி மேன்மேலும் பல சாதனைகள் படைக்க அவர்களுக்கு எனது பாராட்டுகள். அவரது வெற்றி, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக அரங்கில் தொடர்ந்து ஜொலிக்க நமது அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.