LOADING

Type to search

இலங்கை அரசியல்

வட்டுகோட்டையில் வாளுடன் சென்று ஊரவர்களை மிரட்டும் இளைஞர்களை கைது செய்யாமல் பாராமுகம் காட்டும் பொலிஸார்!

Share

இந்த ‘வாள் வீச்சுக்காரர்கள்’ சோழ மன்னர்களுடைய வாரிசுகளா?என்றும் மக்கள் கேள்வி

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வாளுடன் சென்று அந்த ஊரவர்களை மிரட்டுகின்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து இவ்வாறு வாளினை எடுத்து சென்று மிரட்டியுள்ளனர். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தும் பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வாளுடன் வந்த ஒரு இளைஞன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்பப் பெண் ஒருவரது விரலையும் வாளினால் வெட்டி துண்டாக்கியுள்ளார். மேலும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.