உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்
Share
உக்ரைன் மீது ரஷியா நடத்திய அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இந்தியா, சீனா உள்பா பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா அதிகாலை ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்தனர்.















