இடைத்தேர்தல் வெற்றியை வைத்து ஓட்டு சதவீதத்தை கணிக்க முடியாதென நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்
Share
இடைத்தேர்தல் வெற்றியை வைத்து ஓட்டு சதவீதத்தை கணிக்க முடியாதென பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், தற்போது ஒரு தொகுதியில் மட்டும் 39 இடங்களில் வீதிவீதியாக பிரசாரம் செய்துள்ளார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள வாக்குகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் ஆகும். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். எனவே, இந்த இடைத்தேர்தல் வெற்றியை வைத்து வாக்கு சதவீதத்தை கணித்துவிட முடியாது. முதல்-அமைச்சர் விஜய்யை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லுங்கள் என்று நீங்கள் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நடக்கிற விஷயத்தைதான் நாங்கள் சொன்னோம். முதலில் அவர் வீட்டுக்குள் இருந்தார். வீட்டை விட்டு வெளியே வரச் சொன்னோம். தற்போது அவர் வீதிக்கு வந்திருக்கிறார். அதைத்தான் இப்போது சொல்கிறோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.















