LOADING

Type to search

இந்திய அரசியல்

“மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென” பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்

Share

“மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென” இந்திய பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் விஜய், ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் போது மக்கள் நலத்திட்டங்களை சென்று சேரும் என்று தெரிவித்தார். சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார். இதற்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் நாட்டுப்பண் பாடப்பட்டநிலையில், அடுத்ததாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழா மேடையில் பிரதமர் மற்றும் முதல்-அமைச்சருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பேசியதாவது: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாடு பல தொன்மையான பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மாநிலம். தமிழ்நட்டின் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். தமிழ்நாடு மக்களின் சார்பாக பிரதமர் மோடியை வரவேற்கின்றேன் அனைவருக்குமான அரசாக நம்முடைய அரசு உள்ளது. கல்வி வேளாண்மை, திருநர் நலன் என ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனை இலக்காக கொண்டு அனைத்து தரப்பினருக்கான அரசாக நமது அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழகம் என்றைக்கும் துணையாக நிற்கும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை. சென்னையின் வளர்ச்சி மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கு அதன் வளர்ச்சியை கொண்டு சேர்க்க வேண்டும்; இளைஞர்கள் பெரும் வரம் அவர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக திட்டங்கள் இருக்க வேண்டும். சென்னை மெட்ரோ 3ம் கட்ட திட்டம், ஓசூர் – பெங்களூரு திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தந்து நிறைவேற்ற வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மையான வழக்காடு மொழியாக்கும் சட்டப்பேரவை தீர்மானத்தை ஒப்புதல் துரிதமாக வழங்கப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை 5 ஆயிரத்து 110 கோடி ரூபாயை எந்த வித நிபந்தனையும் இன்றி மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.