LOADING

Type to search

இலங்கை அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரினால் தாக்கப்பட்டு கைது

Share

(23-09-2021)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சற்று முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே கைதாகியுள்ளார்.

முன்னதாக குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அங்கு செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவர் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்டபோது அவரை தடுத்து நிறுத்திய பொலிஸார்,கைது செய்ய நேரிடும் என்று எச்சரித்திருந்தனர். அதன் போது கைது செய்ய விரும்பினால் கைது செய்யுமாறு தெரிவித்திருக்கின்றார்.

அதன் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.மேலும் பாராளுமன்ற உறுப்பினரை பொலிஸார் கைது செய்த போது கடுமையாக தாக்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது.