LOADING

Type to search

உலக அரசியல்

மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருதை அதிபர் ஜெலென்ஸ்கி வழங்கினார்

Share

அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருதை அதிபர் ஜெலென்ஸ்கி வழங்கினார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளின் தலையீட்டில் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைகள் அவ்வபோது நடந்து வருகிறதே தவிர போர் முடிந்தபாடில்லை. ரஷியா ஆக்கிரமித்துள்ள ஒலேஷ்கி பகுதியில் தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, அந்ஹ பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகப் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு அங்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிக்கியிருந்த உக்ரைனிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், மெலனியா டிரம்ப்பின் இந்த முயற்சியைப் பாராட்டி அவருக்கு உக்ரைனின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆர்டர் ஆப் ஓல்கா, பர்ஸ்ட் கிளாஸ் எனும் விருது வழங்கப்படும் என உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார். இதனையடுத்து அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருதை வழங்கினார் அதிபர் ஜெலென்ஸ்கி. ரஷியா உடனான போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனிய குழந்தைகளை மீட்டதற்கும், மனிதாபிமான உதவிகளை வழங்கியதையும் பாராட்டி விருது வழங்கப்பட்டது.