LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சியில் சந்தையில் விழுந்து விவசாயி மரணம்

Share

26-09-2021

விவசாயி ஒருவர் சந்தைக்குள் விழுந்து மரணமுற்ற சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்குக் கொண்டு சென்றவேளை நேற்று தர்மபுரம் சந்தைப் பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் வசித்து வரும் பழனியாண்டி மகேந்திரம் (வயது-66) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தரும புரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேதப் பரிசோதனைக் காக கிளிநொச்சி வைத்தியசாலைக் குக் கொண்டு செல்லப்பட்டது.