LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டத்திற்கான நேர்முக தேர்வு ஆரம்பம்.

Share

(மன்னார் நிருபர்)
(29-10-2021)

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்று வியாழக்கிழமை முதல் இடம் பெற்று வருகிறது.

மன்னார் நகர் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் மன்னார் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு தலைமையில் காணி கிளை அதிகாரிகளினால் முதல் கட்ட நேர்முக தேர்வு இடம்பெற்று வருகின்றது.

விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் சுய தொழில் தொடர்பான திட்ட முன்மொழிவு மற்றும் நிதி விபரம் தொடர்பான ஆவணங்கள் குறித்த நேர்முக தேர்வின் போது கோரப்பட்டது டன் மேலதிக அனுபவங்கள் உட்பட சுய தொழில் முயற்சி தொடர்பான பின்புலங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டது.

-மேலும் ஒரே தடவையில் பல நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகளை நேர்முகத்தேர்விற்கு ஒரே தடவையில் அழைத்தமையினால் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளித்துள்ள விண்ணப்பதாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.