LOADING

Type to search

கனடா அரசியல்

சிறுவயதில் ஒரேநாளில் இரண்டு அரங்கேற்றங்களை மேடையேற்றும் செல்வி றொஷேல் கிறிஸ்டனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

Share

வாழ்த்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

“தனது பிஞ்சு விரல்களால் மிருதங்கத்தை வாசித்து வீணையை மீட்டினாலும், றொஷேல் கிறிஸ்டனின் மனதில் உறுதி, சிந்தனையில் தெளிவு,ஆகியவற்றை நான் அவதானித்தேன்”

தனது பிரதம விருந்தினர் உரையில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் தெரிவிப்பு!

இசைச் செல்வி றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதனின் மிருதங்க மற்றும் வீணை அரங்கேற்றங்கள் ஒரே மேடையிடல் கடந்த 24-10-2026 அன்று கனடாவின் விற்பி மாநகரில் உள்ள WHITBY COURT HOUSE மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன.

அவரது மிருதங்க குரு ‘மிருதங்கள் ஷேஸ்த்திரம்’ இசைக் கல்லூரியின் அதிபர் ‘மிருதங்க ஞானவாருதி’ வாசுதேவன் ராஜலிங்கம் அவர்கள் ஆவார். வீணை வாத்திய குரு’ நாத வீணா’ மன்றத்தின் அதிபர் ‘இசைக் கலைமணி’ குகனேஸ்வரி சத்தியமூர்த்தி ஆவார்.

அன்றைய இரண்டு அரங்கேற்றங்களையும் தொகுத்து வழங்கிய தேவா சபாபதி அவர்கள் இறுதிவரை தனது பணியை நேர்த்தியாக ஆற்றினார்.

முதலில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்திற்கு முன்னர் விசேட வழிபாடுகள் மற்றும் வாத்தியக் கருவிகளை அரங்கேற்றச் செல்வி றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதனிடம் வழங்குதல் ஆகியன முறைப்படி நடைபெற்றன.

தொடர்ந்து மிருதங்க குரு ‘மிருதங்கள் ஷேஸ்த்திரம்’ இசைக் கல்லூரியின் அதிபர் ‘மிருதங்க ஞானவாருதி’ வாசுதேவன் ராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் அரங்கேற்றச் செல்வி றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதனின் மிருதங்க அரங்கேற்றம் ஆரம்பமானது.

மேடையில் பக்கவாத்தியக் கலைஞர்களாக ஶ்ரீமதி மதுமதி சிவகுமாரன்(பாடல்), மிதுரன் மனோகரன் (வயலின்), கலையரசன் சிங்கராஜ் (கஞ்சிரா),கதிர் பரணீதரன் (கடம்) ஆகியோர் வீற்றிருந்து றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதனின் மிருதங்க வாசிப்பை மெருகூட்டினார்கள். முதலாவது இரண்டாவது உருப்படிகளை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே அரங்கேற்றச் செல்வியின் அபாரத்திறமை நன்கு வெளிப்பட்டது. மேடையில் அவரது குரு தனது மகிழ்ச்சியை முகத்தில் காட்டிய வண்ணம் தனது மாணவி மேலும் அக்கறையோடும் அவதானத்தோடும் வாசிப்பை உறுதி செய்தார். அத்துடன் பக்கவாத்திய கலைஞர்களும் தங்கள் ஒத்தாசையை வழங்கினார்கள்.

மிருதங்க அரங்கேற்றத்தின் இறுதியில் மிருதங்க ஷேஸ்த்திரத்தின் முதலாவது அரங்கேற்றத்தை மாணவனாக இருந்து குருவிற்கு பெருமை தேடித்தந்த அனந்தகுமார் கௌரவ விருந்தினராக அழைக்கப்பெற்று தனது வாழ்த்துரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த சுப்பிரமணியம் இராஜரட்ணம் அவர்கள் தனது வாழ்த்துரை அன்றைய அரங்கேற்றச் செல்வி கர்நாடக இசைத்துறையில் மாத்திரமல்ல. கல்வி. விளையாட்டு மற்றும் பல துறைகளில் ,ஈடுபட்டு அனைத்திலும் திறமையான வீராங்கனையாகவும் சாதனையாளராகவும் திகழ்கின்றார் என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து வீணை வாத்திய குரு’ நாத வீணா’ மன்றத்தின் அதிபர் ‘இசைக் கலைமணி’ குகனேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் வீணை அரங்கேற்றத்திற்காக மேடையில் சென்று நடு நாயகமாக அமர்ந்தார் அரங்கேற்றச் செல்வி றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதன் அவர்கள்.

மேற்படி வீணை அரங்கேற்றத்தின் பக்கவாத்தியக் கலைஞர்களாக மிருதங்க குரு வாசுதேவன் இராஜலிங்கம், தனுஜன் தேவதாஸ் ( கடம் ) மனோகரன் ( தாளம்- மோர்சிங் ) செல்வி டெறனியா ஜெகதீசன் (தம்புரா) ஆகியோர் பக்கவாத்தியக் கலைஞர்களாகத் திகழ்ந்தார்கள்.

இரண்டாவது அரங்கேற்றத்திலும் தனது பிஞ்சு விரல்களால் வீணையை மீட்டுவதில் தனது வித்துவத்தைக் காட்டத் தொடங்கினார் செல்வி றொஷேல் . அவர்கள் தனது விரல்களால் எவ்வாறு வீணையின் நரம்புகளை இவ்வளவு விரைவாகவும் இனிமையாக இசையை உருவாக்குவதிலும் உச்சத்திற்கு சென்று வருகின்றார் என்பதை பாராட்டும் வகையில் சபையோ கரகோசம் செய்தார்கள். தனது மிருங்க அரங்கேற்றத்தினைப் போன்றே தனது பிஞ்சு விரல்களால் மிருதங்கத்தை வாசித்து வீணையையும் மீட்டினாலும், செல்வி றொஷேல் கிறிஸ்டனின் மனதில் உறுதி ,சிந்தனையில் தெளிவு ஆகியவற்றின் உதவியோடு தனது இரண்டு அரங்கேற்றங்களையும் ஒரே நாளின் அதே மேடையில் செவ்வனே நிறைவேற்றினார்.

அன்றைய தினம் இரண்டு அரங்கேற்றங்களின் இறுதியில் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் அலுவலகம் வழங்கிய அரசு சார்பான சான்றிதழை ‘உதயன் லோகேந்திரலிங்கம் அவர்கள் அரங்கேற்றங்களை சிறப்பாக பூர்த்தி செய்த ரொஷேல் அவர்களுக்கு வழங்கினார். அதில் தனது சிறுவயதில் ஒரேநாளில் இரண்டு அரங்கேற்றங்களை மேடையேற்றும் செல்வி றொஷேல் கிறிஸ்டன் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

என்ற வார்த்தைகளை வாழ்த்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் அங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம் தனது உரையில் இரண்டு அரங்கேற்றங்களையும் ஒரே மேடையில் சமர்ப்பித்த அரங்கேற்றச் றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதன் அவர்கள்.தனது பிஞ்சு விரல்களால் மிருதங்கத்தை வாசித்து வீணையையும் மீட்டினாலும், செல்வி றொஷேல் கிறிஸ்டனின் மனதில் உறுதி ,சிந்தனையில் தெளிவு ,பார்வையில் கூர்மை, ஆகியவற்றை நான் அவதானித்தேன் என்றும் றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதன் அவர்கள் தான் கால் பதித்துள்ள அனைத்து துறைகளிலும் எதிர்காலத்தில் ஒளிவீசி பிரகாசித்து எமது தமிழ்ச் சமூகத்திற்கு நற்பெயரை பெற்றுத் தரவேண்டும் என வாழ்த்தினார்.

இறுதியில் நன்றியுறையாற்றிய அரங்கேற்ற நாயகியின் தாயார் பிரியா அவர்கள் அன்புடனும் நேர்த்தியாகவும் தனது உரையை ஆற்றி பார்வையாளர் மனதில் மகிழ்ச்சியுடன் மண்டபத்தை விட்டு வெளியேறும் வகையில் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார். தொடர்ந்து மேடைக்குச் சென்ற பார்வையாளர் றொஷேல் அவர்களை வாழ்த்தினார்கள்.