LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

Share

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல் தீபாவளி விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். மனைவி நந்தினி, குழந்தை தன்யா, மாமியார் அழகுராணி மற்றும் நண்பர் கார்த்திக்கை உடன் அழைத்துச் சென்றுள்ளார். சுற்றுலா முடித்துவிட்டு நேற்று இரவு இவர்கள் கொடைக்கானலில் இருந்து சொந்த ஊருக்கு காரில் திரும்பியுள்ளனர்.

அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலையில் இருக்கும் வளைவில் திரும்பிய போது கார் நிலைதடுமாறி 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கோகுலின் மனைவி நந்தினி, அவரது குழந்தை மற்றும் மாமியார் ஆகிய 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.