LOADING

Type to search

இலங்கை அரசியல்

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல்

Share

(27-11-2021)

முல்லைத்தீவு பகுதியில் ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வ சந்திரன் மீது மூர்க்கத்தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளரை ஏன் எடுக்கின்றாய் என்று கேட்டே நான்கு இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரசன்னமாகி இருக்கின்றார்.