LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது

Share

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் காரணமாக சில வாரங்கள் மத்திய கிழக்கில் சற்று அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தியில் சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, கடந்த சில வாரங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டு அமைதி நிலவி வந்தது. மேலும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக இரு தரப்பும் கூறி வந்தன. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் குவாசம் தீவு மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஹர்முஸ் ஜலசந்தி அருகே குவாசம் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.