LOADING

Type to search

இலங்கை அரசியல்

தலவாக்கலையிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்

Share

(1-12-2021)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோக்கர்ஸ் பகுதி மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை 10 :30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் வீட்டின் சமையலறைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பை பற்ற வைத்த பின் குறித்த நபர் வெளியில் சென்ற பின்னர் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.