LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொடிகாமம் பகுதியில் பட்டா ரக வாகனத்தை மோதித் தள்ளிய தொடருந்து!!!

Share

03-12-2021

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்தை தொடருந்து மோதித் தள்ளியதால் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கொடிகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள தொடருந்துக் கடவையில் இடம்பெற்றுள்ளது.

தொடருந்தால் மோதித் தள்ளப்பட்ட வாகனம் சிதைந்து போய் காணப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார்.

படுகாயம் அடைந்த வாகனச் சாரதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மின்தடை ஏற்பட்டுள்ளமையால் தொடர்ந்து தொடர்பு சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் கொடிகாமம் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.