LOADING

Type to search

இலங்கை அரசியல்

மதுரை உயர்நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ‘நிறுத்தப்பட்டுள்ள’ பிரதமர் மோடியும் முதல்வர் மு. க. ஸ்டாலினும்

Share

ராஜரத்தினம்- மார்க்கம் – கனடா

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களையும் கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் மாநில அரசிற்கும் உத்தரவிட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் பணியாற்றும் மதிப்பிற்குரிய நீதிபதி இளஞ்செழியன் அவர்களைப் போன்று. இவ்வாறான துணிச்சல் உள்ள நீதிபதிகள் தமிழ்நாட்டிலும் உள்ளார்களே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ள திருமுருகன் என்பவர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில்,இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தது 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளித்து அவமதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல் படையால் கடந்த 34 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே, இலங்கைக் கடற்படை, கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்தியா கொண்டுசெல்வது தொடர்பாக, இலங்கை வெளியுறவு துறையை தொடர்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இதுக்குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஜனவரி மாத தொடக்கத்திலே 68 மீனவர்களும் தாயகம் திரும்ப வகையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை டிசம்பர் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்

இவ்வாறான நிலையில் தமிழகத்தின் மீனவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈமபட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது. இதனிடயே இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஜனவரி 1ல் ரயில் மறியல் நடத்த உள்ளதாகவும் மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், பிடித்துச்சென்று சிறையில் அடைப்பதும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகிறது.

அண்மையில் கூட, 68 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அங்குள்ள சிறைகளில் அடைத்து இருக்கிறது.

ஏற்கனவே குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற் படையினரால் சுடப்பட்டதில் ஒருவர் இறந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு, பாகிஸ்தான் தூதரை வரவழைத்து கடுமையாக எச்சரித்தது.

ஆனால், தமிழக மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 68 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

விசாரணை முடிவில், “புத்தாண்டு தினத்தை தங்களின் உறவினர்களுடன் கொண்டாடும் வகையில் 68 மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை எடுங்கள்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த விசாரணை 31ம் திகதி வெள்ளிக்கிழமை மதுரை நீதி மன்றத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.