LOADING

Type to search

இலங்கை அரசியல்

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை காலவரையின்றி ஒத்திவைக்க கோரிக்கை – எம்.கே.சிவாஜிலிங்கம்

Share

(4-1-2022)

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, தற்போது பரவிவரும் ஒமிக்ரோன், கொவிட் 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன்.

அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகர சபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.

அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலம் இதனை தடுக்க முற்படுவோம் என்றார்.