அதர்வா முரளியின் “நிறங்கள் மூன்று” படப்பிடிப்பு ஆரம்பம்
Share
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் நிறங்கள் மூன்று திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான தலைப்புக்கொண்ட இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
அப்பாவின் அடையாளத்தோடு சினிமா துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகர் அதர்வா முரளி. சினிமாவில் நடிப்பதற்கு திறமைதான் முக்கியம் நிறமல்ல என்று சாதித்து காட்டியவர் நடிகர் முரளி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த அவர் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருடைய மகன் அதர்வா தமிழில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பரதேசி உட்பட பல வெற்றித் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.













