LOADING

Type to search

சினிமா

நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்

Share

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் சிலம்பரசன் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. நடிப்பு, இயக்கம், பாடல், இசை என பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நடிகர் சிம்பு பல்வேறு சாதனைகளை படைத்து வருவதால் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சென்னை பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்பதால் அந்த படத்திற்கும் இந்த பட்டமளிப்பு இருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதில் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன், தொழிலதிபர் சந்தோஷம் ஆகியோருக்கும் கவுரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை டாக்டர் பட்டத்தைப் பெற்ற நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், நாசர்,பிரபு, விஜயகாந்த், விவேக், விஜய், விக்ரம் ஆகிய தமிழ் பிரபலங்கள் வரிசையில் தற்போது சிலம்பரசன் டாக்டர் பட்டம் பெற்று இருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்தது சிலம்பரசன் கூறுகையில் என்னுடைய நடிப்பிற்கும், திறமைக்கும் என் தாய் தந்தையே காரணம் என அதில் தெரிவித்திருந்தார். சிறுவயது முதல் என்னை சரியாக பயன்படுத்தி திரைத்துறையில் சிறப்பாக செயல்பட காரணமாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.