LOADING

Type to search

இலங்கை அரசியல்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம்!

Share

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் 9ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், குறித்த நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதை, வலியுறுத்தி தையிட்டி பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணி உரிமையாளர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரிய மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு பதற்றமான நிலைமை தொடர்கிறது.