சொந்த பணத்தில் RRR படத்தின் உச்சக்கட்ட காட்சியை படமாக்கிய ராஜமௌலி
Share
தொட்டதெல்லாம் வெற்றி அதுவும் உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பாராட்டப்படும் வெற்றி அடுத்து யாரை இயக்குவார் என இந்திய திரையுலக சூப்பர் ஸ்டார்களே காத்துக்கிடக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்பவர் SS.ராஜமௌலி. இவர் இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டுடென்ட் நெம்பர் 1 எனும் திரைப்படத்தில் இருந்து கடைசியாக வெளியான பாகுபலி சீரிஸ் வரை அனைத்தும் மெகா ஹிட் திரைப்படங்கள் தான். அப்படி ரசிகர்களின் மனநிலையை எப்படி புரிந்து இவர் படம் எடுத்து ஹிட் ஆக்குகிறார் என அனைவர்க்கும் ஓர் ஆச்சர்யம் தான். ஆனால், அப்படிப்பட்ட ராஜமௌலியே ஒரு இடத்தில சறுக்கியுள்ளார். அதாவது அவர் இயக்கிய 3 வது திரைபடம் தான் சை (SYE). ரக்பி (rugby) எனும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம். அந்த படத்தின் கிளைமேக்ஸை முன்னர் எழுதிய படி படமாகிவிட்டார். ஆனால் அது திருப்திகரமாக இல்லை. அதனால், அதனை திருப்பி எடுக்க முயற்சித்த போது தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லை. உடனே தனது சம்பளத்தை வைத்து அந்த கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி பின்னர் எடிட் செய்து வெளியீடு
செய்துள்ளார். படம் எதிர்பார்த்தபடி சூப்பர் ஹிட். உடனே தயாரிப்பாளர் அந்த கிளைமேக்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க முன்வந்தபோது அதனை மறுத்துவிட்டார். கிளைமேக்ஸை சரியாக எழுதாமல் வந்தது எனது தவறு. இந்த காசை வாங்காமல் இருந்தால் தான் திரும்ப இதே போல தவறான கிளைமேக்ஸை நான் எழுதாமல் இருப்பேன். அதனால் அந்த பணம் எனக்கான அபராதம் என கூறி மறுத்துவிட்டாராம். அந்த நேர்மைக்கு கிடைத்த பரிசுகள் தான் அடுத்தடுத்த மெகா ஹிட்கள். அடுத்து வரப்போகும் RRR திரைப்படத்திற்கு உலக சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.













