LOADING

Type to search

சினிமா

கொரோனா தொற்றிலிருந்து தப்பினார் நடிகர் விஜய் சேதுபதி

Share

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான்.

அந்தளவுக்கு படங்களை விரல்விட்டு கூட என்ன முடியாத அளவிற்கு புக் செய்து வைத்துள்ளார். இவரது கால்ஷீட்டிற்காக பாலிவுட் சினிமாகாரர்களே காத்திருக்கிறார்கள். இவர் தமிழில் நடித்து வரும் முக்கியமான திரைப்படம் தான் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடித்து, பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கான காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டனவாம். மீதம் உள்ள காட்சிகள் கமலை வைத்து படமாக்கப்பட்டு வந்தது. விஜய் சேதுபதி தனது காட்சிகளை முடித்த 2 வது நாளே படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா பரவி, தற்போது இயக்குனர் முதல் உதவி இயக்குனர், டெக்னீசியன் என பலருக்கு கொரோனா பரவி உள்ளது. விஜய் சேதுபதி அந்த இடத்தில இருந்திருந்தால், இவருக்கு கொரோனா பரவவில்லை என்றாலும், இவர் கொஞ்ச நாள் தனிமை படுத்துதலில் இருந்துதான் ஆகவேண்டும். அப்படி மாட்டியிருந்தால்,மற்ற படங்களில் நடிப்பது கால்ஷீட் குளறுபடி என பிரச்சனைகள் எழுந்திருக்கும்.