LOADING

Type to search

சினிமா

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் புதிய பதாகை அடுத்த வாரம் வெளியாகிறது

Share

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் புதிய பதாகை அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஒன்று. ஏப்ரல் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை படத்திலிருந்து தலைப்பு அறிவிப்பு, வெளியீடு செய்யும் மாதத்தின் பதாகை ஆகியவை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

வெளியிடும் நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்து பதிவேற்றங்கள் தர சன்பிக்சர்ஸ் தயாராகி விட்டது. இந்நிலையில், அடுத்த வாரம் பீஸ்ட் படத்தின் புதிய பதாகை வெளியாகும் என பேசப்படுகிறது. அதில் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இடம்பெற்றிருக்கலாம். பெரும்பாலும் ஜனவரி 26-ம்தேதியன்று பதாகை வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. முதல் பாடல், காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம். காதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.