LOADING

Type to search

சினிமா

கொரோனா ஊரடங்கில் சிக்கிக் கொண்ட ஜெயம் ரவியின் படம்

Share

நடிகர் ஜெயம் ரவி முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் தனது நடிப்பில் வெளியாகிய பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்க வேண்டி உள்ளதாம். இந்த பாடல் பெரும்பாலும் இரவு நேர காட்சிகளாக இருப்பதால் இரவு நேரத்தில் எடுக்கப்பட வேண்டி உள்ளது. ஆனால் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு போட்டுள்ளதால் இந்த பாடல் காட்சியை படமாக்க முடியாமல் படக்குழுவிர் திணறி வருகிறார்களாம்.