LOADING

Type to search

சினிமா

நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படம் ஏப்ரல் 14 தேதி வெளியீடென அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படத்தின் வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கத்தி, மாஸ்டர் படங்களை அடுத்து அனிருத் இந்தப் படத்தில் விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லீ, யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பீஸ்ட் படத்தின் ஒவ்வொரு அப்டேட்-ம் செம ஹிட் அடித்து வருகிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதி கேஜிஎப் இரண்டாம் பக்கம் வெளியாவதால் பாக்ஸ் ஆபிசில் இரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என்பது உறுதி!