LOADING

Type to search

கனடா அரசியல்

Scarborough North Federal Riding shoul be captured by ‘Red’ Again!

Share

Current Liberal MPs from GTA gathered to support their Candidate James Li

ஸ்காபுறோ- வடக்கு இடைத்தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி வெற்றிபெற நாம் அனைவரும் உழைக்க வேண்டும்!

ரொறன்ரோ பெரும்பாகத்தின் தற்போதைய லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒன்றாக அழைப்பு!

எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் நடைபெறவுள்ள ஸ்காபுறோ- வடக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி வேட்பாளர் James Li வெற்றிபெற நாம் அனைவரும் உழைக்க வேண்டும். எமது பிரதமர் மார்க் கார்னி ஒருவராலேயே பல்வேறு சவால்கள் நிறைந்த இந்த கால கட்டத்தில் கனடியர்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதை கனடியர் மாத்திரமல்ல வெளிநாடுகளில் உள்ள தலைவர்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள். அத்துடன் ஸ்காபுறோ- வடக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடும் James Li அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் என்பதை நாம் உறுதி செய்கின்றோம். அவர் ஒரு கணக்காளர் அத்துடன் ரொறன்ரோ கல்விச் சபையின் உ றுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். எனவே அந்த அனுபவங்களோடு அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடித்து நிலைத்து மக்கள் பணி செய்வார் என்பதை நாமும் எமது பிரதமரும் நன்கு புரிந்து கொண்டுள்ளோம்.

அத்துடன் தற்போது அமெரிக்காவின் பொருளாதார குழப்பங்களால் எமது நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது இந்த நேரத்தில் மார்க் கார்னி அரசாங்கத்தில் பல்வேறு அனுபவங்கள் மற்றும் திறமைகள் கொண்டவர்கள் தேவைப்படுகின்றார்கள். எனவே எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி கனடா நடைபெறவுள்ள ஸ்காபுறோ- வடக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடும் James Li என்னும் தகுதியான வேட்பாளரை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் கூட்டாக வலியுறுத்துகின்றோம்”

இவ்வாறு மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையில் அங்கு கூடிய லிபரல் கட்சியின்; தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மேடையில் தெரிவித்தனர்.
ரொறன்ரோ பெரும்பாகத்தின் தற்போதைய லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒன்றாக அழைப்பு இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.