LOADING

Type to search

சினிமா

“சாமி” படம் மட்டும் ஓடலனா சினிமாவை விட்டே ஓடி போயிடுவேன் என சபதம் போட்டவர் திரிஷா

Share

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக கதாநாயகியாக வலம் வந்த, வரும் நடிகைகளில் முக்கியமானவர் த்ரிஷா. நயன்தாராவும் அதே போல தான் அதிக வருடங்களாக அதிக சம்பளத்துடன் இருக்கிறார் என்றாலும், அதற்கு முன்னோடியாக திரிஷா தான் இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் த்ரிஷா, சிறுசிறு வேடங்களில் தலை காட்டி வந்தார். அதன் பிறகு முதல் படமாக அமீர் இயக்கி , சூரிய நாயகனாக நடித்த மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் த்ரிஷா.

அதன் பிறகு ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். மௌனம் பேசியதே திரைப்படம் பாராட்டுகளை பெற்றாலும் வசூல் ஓரளவுக்கு தான் வந்ததாம். மனசெல்லாம் திரைப்படம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக மூன்றாவது பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததாம். அப்போது தான் இயக்குனர் ஹரி சாமி படத்தில் நடிப்பதற்காக அக்ராகரத்து பெண் வேண்டும் என தேடி த்ரிஷாவை தேர்வு செய்துள்ளார்.

பலரும் வேண்டாம் என கூற இல்லை த்ரிஷா சரியாக இருப்பார் என கூறியுள்ளார் இயக்குனர் ஹரி. அப்போது த்ரிஷாவே தனது நண்பர்கள் வட்டாரத்தில் இந்த சாமி படம் மட்டும் ஓடவில்லை என்றால் நான் சினிமாவை விட்டே போய்விடுவேன். கண்டிப்பாக இந்த படம் ஓடும் என சபதம் செய்துள்ளார். அவர் சொன்னபடி படம் வெற்றி பெற்று வசூல் மழை பொழிந்தது. த்ரிஷாவுக்கு அடுத்து வந்த வாய்ப்புகள் பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.