LOADING

Type to search

சினிமா

சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் இணையதளத்தில் ஏப்ரல் 7 தேதி வெளியிடப்படுகிறது

Share

எதற்கும் துணிந்தவன்’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இணையதளத்தில் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெஸ்ட் இணையதளத்தில் வெளியாகவுள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.