LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்நாடு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 01.04.2022 முதல் 11.04.2022 வரை வசந்த நவராத்திரி விழா

Share

ஆரோக்யபுரி, ஞானபுரி, அழகாபுரி, பைரவபுரி, கருடபுரி, சௌந்தர்யபுரி, ஔஷதபுரி, சம்பத்துபுரி, சௌபாக்யபுரி, குபேரபுரி என்று மேலும் பலவாறு பக்தர்களால் அழைத்து மகிழ்கின்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு யக்ஞஸ்ரீ டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி நிகழும் மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 18-ந் தேதி (01.01.2022) வெள்ளிக்கழமை முதல் பங்குனி 28-ம் தேதி (11.04.2022) திங்கட்கிழமை வரை 11 நாட்களும் காலை மாலை இருவேளையிலும் சிறப்பு அபிஷேகம், ஹோமங்கள், வேதபாராயணம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மேற்படி வைபவம் நடைபெறவுள்ளதால் பக்தகோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி, ஸ்ரீ பஞ்சமுக வாராகி, ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ மாமேரு, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவி, ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், ஸ்ரீ சப்த கன்னிகைகள், ஸ்ரீ நவக்கன்னிகைகள், ஸ்ரீ அனுசுயா தேவி போன்ற தேவிமார்களின் அருள்பெற்று ஆனந்தமாய் வாழ எல்லாம் வல்ல ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளை ப்ரார்த்திக்கின்றோம்.

பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடு செய்து சகல பாக்கியங்களையும் பெறலாம். வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.

உலகம் க்ஷேமம் அடையவும், வேண்டும் வரங்கள் கிட்டவும், சகல கார்யங்களில் வெற்றி பெறவும், சகல பாக்கியங்கள் பெறவும்,

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாமேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருப்பதால். வசந்த நவராத்திரி முன்னிட்டு ஒன்பது தினங்களிலும் காலை,மாலை இருவேளையும் சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் நடத்தப்படவுள்ளது. ஒன்பது தினங்களிலும் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரிக்கு சிறப்பு அலங்காரம் செய்து

ஸ்ரீ நவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறவுள்ளது.

வசந்த நவராத்திரி வழிபாடும் பலன்களும்:

வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; அன்யோன்யம் உண்டாகும். வசந்த நவராத்திரியில் பக்தர்கள் பங்கேற்று சக்தி வழிபாடு செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

பங்கேற்கும் பக்தர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.